உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
இன்று நண்பகல் 12.00 மணி வரை கட்டுப்பணத்தை வைப்பிலிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்பட உள்ளன.
தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் திருத்தங்களுடன் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதுடன் ஆதரவாக 97 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் கிடைத்தன.
வாக்கெடுப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் மூலம் தேர்தலை தாமதப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த சட்டமூலத்தின் ஊடாக தேர்தலை ஒத்திவைக்கும் விருப்பம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
N.S