இந்திய – இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் கொழும்பில் சந்திப்பு!

0
91

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர்,எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியபகப்போர்வை விஜயம் செய்துள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஏனைய சில அமைச்சர்களை நேற்று சந்தித்தார்.

உட்கட்டமைப்பு, இணைப்பு, எரிசக்தி, தொழில் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து இந்த சந்திப்புகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது, இலங்கையின் பொருளாதார மீட்சியை விரைவுபடுத்துவதற்காக இலங்கைக்கான முதலீட்டு வரங்களை அதிகரிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்த இந்திய அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை இன்று சந்திக்கவுள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வலுவாக ஆதரிப்பதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) இந்தியா உத்தியோகபூர்வமாக தெரிவித்த ஒரு நாளுக்குப் பிறகு ஜெய்சங்கரின் வருகை அமைந்துள்ளது.

“இலங்கையின் வருங்கால (கடன்) திட்டத்திற்கான எங்கள் வலுவான ஆதரவை நாங்கள் உறுதிசெய்கிறோம், மேலும் இலங்கையின் பொதுக் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கு இணங்க நிதி/கடன் நிவாரணத்துடன் இலங்கைக்கு ஆதரவளிக்க உறுதியளிக்கிறோம்” என்று இந்திய நிதியமைச்சின் அதிகாரி ரஜத் குமார் மிஸ்ரா IMF தலைவருக்கு ஒரு கடிதத்தில் தெரிவித்தார்.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெற முயற்சிக்கிறது மற்றும் அதன் முக்கிய இருதரப்புக் கடனாளிகளான இந்தியா, சீனா மற்றும் ஜப்பானின் நிதி உத்தரவாதங்களைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here