தேர்தலுக்கான பணத்தை தேடுவது கடினம் – உச்ச நீதிமன்றுக்கு திறைசேரி அறிவிப்பு

0
70

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம் தேடுவது மிகவும் கடினமாகிவிட்டதாக திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பண முகாமைத்துவம் மிகவும் சவாலான சூழ்நிலையாக மாறியுள்ளதாகவும் அதன் காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணத்தை தேடுவது கடினமான பணியாக மாறியுள்ளதாகவும் அவர் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் மொத்த மாதாந்த வருமானம் 169 பில்லியன் ரூபாவாகவும், அரசாங்க ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், மானியங்கள், உரங்கள் மற்றும் மருந்துகளுக்கான மாதாந்தச் செலவு 145 பில்லியன் ரூபாவாகும்.

மேலும், வட்டி கொடுப்பனவுகள், கடன் கொடுப்பனவுகள், மூலதனச் செலவுகள் உள்ளிட்ட பாரிய தொகையை அரசாங்கம் ஏற்க வேண்டியுள்ளதாகவும், அந்த மாதாந்தச் செலவுகள் அனைத்தையும் ஈடுகட்ட மேலும் 296 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலைமையினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பணத்தைச் செலவு செய்வதுடன், அரசாங்கப் பணத்தை அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதும் மிகவும் கடினமாகிவிட்டது என சிறிவர்தன தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here