கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்றால், மீண்டும் ஒரு கொரோனா திரிபு ஏற்படும் என ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை.

0
174

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்றால், மீண்டும் ஒரு கொரோனா திரிபு ஏற்படும் என ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனாவில் இருந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என புதிய திரிபு வகை வைரஸ்கள் அதிக அச்சுறுத்தலாக உள்ளன.

இந்நிலையில், 2022 உலக பொருளாதார சபையில் உரையாற்றிய ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டெரெஸ் ´உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக செயற்படுத்துமாறு வலியுறுத்தினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாம் பலரை இழந்து தவிக்கிறோம். இந்த நிலை இப்படியே நீடித்தால் அன்றாட வாழ்க்கையும், பொருளாதாரமும் சீர்குலையும் நிலை ஏற்படும்´ என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒவ்வொரு நபரும் தடுப்பூசி போட தவறினால் புதிய திரிபு வகை வைரஸ்களை சந்திக்க நேரிடும். 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மக்கள் தொகையில் 40 வீதத்திற்கும், நடுப்பகுதியில் 70 சதவீதத்திற்கும் தடுப்பூசி போட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு இலக்கை நிர்ணயித்தது. இந்த இலக்கை உலக நாடுகள் நெருங்க விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. தொழில்நுட்ப திறனுடன் வளரும் நாடுகளுடன் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் உயிரை பறிக்கும் தொற்றுநோயை கட்டுப்படுத்த முடியும்´ என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டெரெஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here