எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை!

Date:

உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 89 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது 07 வருடங்களின் பின்னர் பதிவான அதிகூடிய பெறுமதியாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு தடவைகள் எரிபொருள் விலையை அதிகரிக்க முயற்சித்த போதிலும் டீசல் லீற்றர் 30 ரூபா நட்டத்தில் விற்பனை செய்யப்படுவதாக கம்மன்பில கூறுகிறார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் நாட்களில் மீண்டும் எரிபொருட்களின் விலையை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது எரிபொருள் இறக்குமதிக்காக மாதாந்தம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட வேண்டியுள்ளதாகவும், இது நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு சமமானதாகும் என எரிசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பாரதூரமான நிலைமையை உணர்ந்து எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களை அமைச்சர் கேட்டுக்கொள்கிறார்.

பிப்ரவரியில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை $ 100 ஐ தாண்டும் என்று கணிக்கப்பட்ட சமீபத்திய ஊழல்களின் விளைவாக இந்த சிறப்புக்கான தேவை கணிசமாக வளர்ந்துள்ளது.

இலங்கை தற்போது கடுமையான டொலர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் எரிசக்தி அமைச்சருக்கு மீண்டும் எரிபொருள் விலையை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை.

அதன்படி, பெப்ரவரியில் எரிபொருள் விலை மீண்டும் கணிசமான அளவு உயர வாய்ப்புள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்திய ஜார்கண்ட் மாநில மாநாட்டில் இதொகா தலைவர், ஶ்ரீதரன் எம்பி பங்கேற்பு

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் இதொகா...

தங்காலையில் இருவர் சுட்டுக் கொலை

தங்காலை, உனகுருவாவில் உள்ள கபுஹேன சந்திப்பில் நேற்று மாலை 6.55 மணியளவில்...

ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து சர்வதேச...