ஊர்காவற்றுறையில் கோர விபத்து : எட்டு பேர் வைத்தியசாலையில்

Date:

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறையில் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸும் தனியார் பஸ்ஸும் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்தனர்.

ஒருவர் படுகாயமடைந்த நிலையிலும், எழுவர் சிறியளவான காயங்களுடனும்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட்னர்.

பஸ்ஸின் சாரதிகள் இருவரும் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இன்று காலை 6.30 மணியளவில் பயணி ஒருவரை ஏற்றுவதற்காக இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வீதியில் நிறுத்தப்பட்ட நிலையில் பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் மோதியுள்ளது.

இதன்போது இரண்டு பஸ்களும் பலத்த சேதமடைந்தன. காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் வாகனம் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...