சிஐடிக்கு சென்ற தயாசிறி ; போலி கையெழுத்தை பயன்படுத்தியதாக முறைப்பாடு!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தனது போலி கையெழுத்தைப் பயன்படுத்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட முயற்சித்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முறைப்பாடு செய்துள்ளார்.

தெஹிவளை – கல்கிசை மாநகர சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை வழங்கியுள்ளதாகவும், போலியான கையொப்பம் இட்டுள்ளதாகவும் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளார்.

மேலும், அளிக்கப்பட்ட வேட்புமனுக்கள் போலியான ஆவணங்கள் என்றும், அதில் அவரது போலி கையெழுத்தும் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தெஹிவளை – கல்கிசை மாநகர சபையின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எந்தவொரு குழுவும் போட்டியிடவில்லை எனத் தெரிவித்த அவர், இவ்வாறான போலிப் போட்டியாளர்களால் ஏமாற வேண்டாம் என பிரதேசவாசிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...

மஹிந்தவின் சொத்து விபரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான...

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...