பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (ஜனவரி 25) காலை பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரது வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், மாலையில் அவர் புதுக்கடை எண் 05 மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை அடுத்த திங்கட்கிழமை (27) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.