சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்த சஜித், அநுர, மைத்திரி, டலஸ், மனோ அணிகள்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று  மாலை நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தை பிரதான அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்படி சந்திப்பில் பங்கேற்றிருந்தாலும் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் என்பன பங்கேற்கவில்லை.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உத்தர லங்கா சபாகய, சுதந்திர மக்கள் சபை, தமிழ் முற்போக்குக் கூட்டணி என்பன சர்வக்கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அரச ஆதரவு கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...