வடக்கில் தமிழ் மக்களின் 100 ஏக்கர் காணிகளை விடுவிக்க பணிப்பு

0
145

வடக்கில் பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் என அடையாளம் காணப்பட்ட 100 ஏக்கர் காணிகளை ஒப்படைக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மாவட்டச் செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்படும் தமது தனியார் காணிகளை கையளிப்பதாகும். அடையாளம் காணப்பட்ட காணிகளில் நடத்தப்பட்ட முகாம்களை வேறு இடங்களில் நிறுவி அந்த காணிகளின் முந்தைய உரிமையாளர்களுக்கு மாற்றுமாறு சாகல ரத்நாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த காணிகளின் உரிமை மாவட்ட செயலாளர்கள் ஊடாக மக்களிடம் கைமாற்றப்பட உள்ளது. பெப்ரவரி 11ஆம் திகதிக்கு முன்னர் இந்தக் காணிகளை மக்களுக்கு விடுவிக்குமாறும் சாகல ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் 75 ஆவது சுதந்திரத்துடன் இணைந்து இந்தக் காணிகள் விடுவிக்கப்படும் என்றும் தமிழ் மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்க்கும் வகையில் இன்னும் காணிகள் இருப்பின் சட்டரீதியான நிலையையும் கண்டறிந்து கையளிப்பதாகவும் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here