சமனுக்கு விளக்கமறியல், ரலிலுக்கு எதிராக வழக்கு

0
21

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்து, மார்ச் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் இன்று (28) கொழும்பு கோட்டை நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இந்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் அழைக்கப்பட்டது.

ரூபாய் 166 இலட்சம் மதிப்புள்ள அரச பொது சொத்துகளை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், பொது சொத்துகள் சட்டத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க அவர்களின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள லண்டன் பயணம் மேற்கொள்ள அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதி தற்போது பிணையில் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் திகதி குற்றப்புலனாய்வு துறைக்கு வாக்குமூலம் வழங்க வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன் பின்னர் ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here