சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா, வரும் பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த தகவலை IMF-இன் ஆசிய-பசிபிக் பிராந்தியத் துறைத் தலைவர் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள IMF ஆதரவு பொருளாதார திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் வெற்றியை மதிப்பாய்வு செய்வதுடன், இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கிலும், IMF நிர்வாக இயக்குநர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தை கிருஷ்ணா ஸ்ரீநிவாசன், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
