பாலியல் தொந்தரவு! பாராளுமன்ற ஊழியர்கள் கைது செய்யப்பட்டது எப்படி? வெளிவரும் உண்மை

Date:

தனது பதவிக் காலத்திற்கு முன்னரோ அல்லது காலத்திலோ பாராளுமன்றத்தில் எந்தவொரு தரத்திலுள்ள எவரும் சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்பட்டால் அது தொடர்பில் நாட்டில் தற்போதுள்ள சட்டத்தின்படி செயற்படத் தயங்கமாட்டேன் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் கனிஷ்ட ஊழியர்கள் மூவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில், நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர வெளியிட்ட விசேட அறிவிப்பொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பு வருமாறு.

நான் நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டதன் பின்னர், 2022ஆம் ஆண்டிலும் அதற்கு முன்னரும் நாடாளுமன்றத்தின் வீட்டுப் பராமரிப்புத் துறையில் பல பெண்கள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் பல சம்பவங்கள் குறித்து எனக்கு புகார் அளிக்கப்பட்டு, அதற்கேற்ப சபாநாயகரின் அறிவுறுத்தலின் கீழ் கூடுதல் விசாரணைக்காக உள்ளக விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இது தொடர்பாக நான் அண்மையில் விசாரணைக் குழுவின் அறிக்கையைப் பெற்று மேலதிக ஆலோசனைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்தேன். அறிக்கையை ஆய்வு செய்த சட்டமா அதிபர், சம்பவம் தொடர்பான முதற்கட்ட முறைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டியது அவசியம் என அறிவுறுத்தினார்.

இதன்படி, இது தொடர்பான அறிக்கையை நான் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்ததன் பின்னர், பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டது.

எனவே, நான் நியமித்த குழுவின் அறிக்கையின் பிரகாரம், சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவரின் பணிப்புரையின் பிரகாரம், பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்திலோ அல்லது எனது சேவைக் காலத்திலோ எந்தவொரு தரத்திலுள்ள எந்தவொரு நபரும் சட்டத்திற்குப் புறம்பாகச் செய்யும் எந்தவொரு செயலுக்கும் நான் உட்பட உயர்மட்ட நிர்வாகம் நாட்டின் தற்போதைய சட்டத்தின்படி செயல்படத் தயங்கமாட்டோம், மேலும் நாங்கள் எப்போதும் வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் பெறுவோம் என்று கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...