தடுப்பூசி போடாதவர்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கவும்

Date:

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களை பொது இடங்களில் அனுமதிப்பதை வரையறுத்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய, போதுமான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்தல் வேண்டுமென வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் வினவிய போது, பொது இடங்களுக்கு பிரவேசித்தல், முழுமையாக தடுப்பூசி ஏற்றல், தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் வயதெல்லை மற்றும் தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபடுவதற்கான வரையறைகள் தொடர்பில் விரைவில் பரிந்துரைகள் வௌியிடப்படுமென அவர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிய அமைச்சர்!

எரிசக்தி அமைச்சராக கலாநிதி அருண கருணாதிலக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...

நிலக்கரி மோசடி பொய்! எதிர்கட்சிக்கு தோல்வி

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் எந்தவிதமான நிலக்கரி மோசடியும்...

JVPயின் முழுநேர தொண்டர்கள் ராஜிதவிடம் புலம்பல்

தற்போதைய அரசாங்கத்தின் முன்னணி அமைச்சர்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன...

‘அண்டை நாட்டுக்கு முதலிடம்’ – இந்திய துணை ஜனாதிபதி உறுதி

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய...