மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு

Date:

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல் அலுவலகங்களுக்கு விநியோகிக்க கரம் போர்டுகள் மற்றும் டாம் பலகைகள் இறக்குமதி செய்து பகிர்ந்ததன் மூலம் அரசிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டி, முன்னாள் அமைச்சர்கள் மகிந்தானந்த அலுத்த்கமகே, நலின் பெர்னாண்டோ மற்றும் விளையாட்டுத் துறை முன்னாள் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்வரச்சி ஆகியோருக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கில், முன்வைக்கப்பட்ட அடிப்படை எதிர்ப்புகள் தொடர்பான உத்தரவை அறிவிப்பது மார்ச் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கு இன்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மகிந்தானந்த அலுத்த்கமகே மற்றும் நலின் பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தப்பட்டனர்.

இன்றே அந்த உத்தரவு அறிவிக்கப்பட வேண்டியிருந்த போதிலும், நீதிபதி புத்திக சீ. ராகல தெரிவித்ததாவது, சம்பந்தப்பட்ட உத்தரவு இன்னும் தயாராக இல்லாததால், அது மார்ச் 25ஆம் திகதி அறிவிக்கப்படும் என கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...

எம்மை பயமுறுத்தி வாயடைக்க முடியாது

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுஜன பெரமுனையின்...

ஹெலிகாப்டர் கொள்வனவு செய்ய சிங்கப்பூர் சென்றுள்ள டட்லி

அடிக்கடி செய்திகளில் இடம்பெறும் கோடீஸ்வர தொழிலதிபர் டட்லி சிறிசேன ஹெலிகாப்டர் ஒன்றை...

சபாநாயகர் செய்யும் ஊழல் அம்பலம்

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற துணைச் செயலாளர் சாமிந்த குலரத்ன, சபாநாயகர்...