07 கோரிக்கைகளை முன்வைத்து நாளை (07) காலை 7 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிலாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தாதியர்கள், மருத்துவ ஆய்வுகூட வல்லுனர்கள், மருந்தாளர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனப் பலதரப்பட்ட ஊழியர்களும் இதில் பங்குபற்றவுள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
பணி முரண்பாடு, கடமை கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும், புற்றுநோய், மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள், சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சைக்கான மருத்துவமனைகள் மற்றும் மத்திய இரத்த வங்கி ஆகியவற்றில் வேலைநிறுத்தம் நடைபெறாது என்று சம்மேளனம் தெரிவித்துள்ளது.