இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று (07) காலை ஆரம்பமாகிறது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸார், முப்படையினர் மற்றும் சுகாதார திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
இன்று முதல் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறுகிறது.
இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 2,438 நிலையங்களில் மொத்தம் 345,242 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.கொரோனா தொற்றுக்குள்ளான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்காக 29 சிறப்பு மையங்களில் பரீட்சை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.