வெயிலின் தாக்கத்தால், தக்காளிகளை குப்பையில் கொட்டும் அவலம் !

Date:

பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஆண்டில், தென்மேற்கு பருவமழையையொட்டி ஜூன் மாதத்தில் தக்காளி சாகுபடி அதிகமாக இருந்தது.

வடக்கிபாளையம், சூலக்கல், நெகமம், முத்தூர் பொன்னாபுரம், தாளக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி அறுவடை பணி செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை பல நாட்கள் தொடர்ந்து பெய்ததால், சில கிராமங்களில் செடியிலேயே பழுத்த தக்காளிகள் தரையில் விழுந்து அழுக துவங்கியது.


தற்போது மழை இல்லாமல் வெயிலின் தாக்கத்தால், தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரமாக தக்காளி விளைச்சல் அதிகரித்து, மார்க்கெட்டுக்கு அதன் வரத்து வழக்கத்தைவிட அதிகமானது.தற்போது மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.8 முதல் அதிகபட்சமாக ரூ.10க்கு விற்பனையாகிறது. வரத்து அதிகரிப்பு வழக்கத்தைவிட அதிமாவதால், விலை கட்டுபடியாகாமல் குப்பையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...