அவலோகிதேஸ்வர போதிசத்வா என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மஹிந்த கொடிதுவாக்குவை பிணையில் செல்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (07) அனுமதி வழங்கியுள்ளது.
ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அவலோகிதேஸ்வரரைப் போன்று பாவனை செய்து பௌத்த மதத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மகிந்த கொடிதுவாக்குக்கு மனநல சிகிச்சை தேவை என அண்மையில் (ஜனவரி 24) கோட்டை நீதவான் நீதிமன்றில் தெரியவந்தது.
இதன்படி, சந்தேகநபரை அன்றைய தினம் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அவரை மனநல சிகிச்சைக்காக பரிந்துரைக்குமாறு உத்தரவிட்டிருந்தது.