நாட்டைக் கட்டியெழுப்பஅனைத்துக் கட்சிகளுக்கும் ரணில் அழைப்பு

0
132

தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (07) இடம்பெற்றுக்கொண்டிருக்கும் 9ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டைக் கட்டியெழுப்பும் கனவை நனவாக்க சிறந்த மாற்று வழிகள் இருந்தால் முன்வையுங்கள் என்றும், அது தொடர்பில் கலந்துரையாட தாம் எப்போதும் தயாராக இருகின்றோம்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கத் தயாராக இருப்பதாகவும்” அதிபர் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன ஒன்றிணைத்தது போன்று ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி, ஆகிய கட்சிகளும் நாட்டுக்கான பொதுவான பயணத்தில் இணையுமாறு அதிபர் மேலும் வலியுறுத்தினார்.

தவிரவும், அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கும் கூட ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

9 ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கை விளக்க உரையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here