மட்டக்களப்பில் ஜோதிர்லிங்க அருங்காட்சியகம் திறந்து வைப்பு!

0
126

இந்தியாவின் புகழ்பெற்ற 12 சிவாலயங்களிலிருந்து பெறப்பட்ட சிவலிங்கங்கள் மற்றும் 16 அடி உயிரம் கொண்ட சிவலிங்க தியானம் மண்டபம் என பல்வேறு அம்சங்கள் கொண்ட ஜோதிர்லிங்க அருங்காட்சியகம் நேற்று (06) மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் திறந்து வைக்கப்பட்டது.

பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையத்தினால் இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் கலைக்கூடத்தின் நினைவுபடிகம் திரை நீக்கம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டதனை தொடர்ந்து சிவலிங்க தோற்றத்தில் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தியான மண்டபம் திறந்து வைக்கப்பட்டதோடு இந்தியாவிலிருந்து வரலாற்று புகழ்பெற்ற 12 சிவ ஆலயங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜோதிர்லிங்க கலைக்கூடமும் திறந்து வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here