ராஜபக்ச தரப்பை விட மிக மோசமாகச் செயற்படும் ரணில் ; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

0
44

தமிழர் தேசத்தை அழிக்கும் நடவடிக்கைகளில் ராஜபக்ச தரப்பை விட ரணில் மிக மோசமாகச் செயற்படுகிறார் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான விலே நிக்கல், டெபோரா ரோஸ், ஜேமி ராஸ்கின், டேனி கே. டேவிஸ் ஆகியோரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்து கலந்துரையாடினார்.

மிக வேகமாக தமிழர் தேசத்தை இல்லாதொழிக்கின்ற, தமிழர் தேசத்தின் இருப்பை இல்லாமல் செய்கின்ற செயற்பாடுகளில் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் இறங்கியிருக்கின்றது.

பௌத்த மயமாக்கலாக இருக்கலாம் சிங்களக் குடியேற்றங்களாக இருக்கலாம் அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களின் நிலப்பரப்பைப் பறித்து சிங்களக் குடியேற்றங்களை நடத்துவதாக இருக்கலாம். இவையனைத்தும் ரணில் அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.

அதேநேரம், ஜனநாயகத்தை மறுத்து தமிழர்களின் பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரத்தை அவமதித்து, தமிழர்களின் அடிப்படை உரிமைகளாக இருக்கக்கூடிய நிரைவுகூரல் உரிமைகள் போன்ற விடயங்கள் அனைத்தையும் நசுக்கி அடக்கும் மோசமான சூழல் உருவாகி வருகின்றது எனவும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here