Sunday, December 8, 2024

Latest Posts

குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை -பெற்றோர்களுக்கானது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பொம்மைகள் வாங்கும் பொழுது சில பாதுகாப்பான விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதில் சிலவற்றை இங்கே காணலாம்:

குழந்தைப் பருவத்தில் நாம் அனைவரும் கடந்து வந்தவை பொம்மைகள். சரியான பொம்மைகள் குழந்தைகளின் கற்பனை மற்றும் ஒருங்கிணைப்பை வளர்க்க உதவும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பொம்மைகள் வாங்கும் பொழுது சில பாதுகாப்பான விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதில் சிலவற்றை இங்கே காணலாம்:

1) அனைத்து பொம்மைகளிலும், ‘லேபிள்கள்’ ஒட்டப்பட்டிருக்கும். அதனைத் தெளிவாக படித்த பின்னரே பொம்மைகள் வாங்க வேண்டும். அதில் எவ்வாறு பொம்மையை பயன்படுத்தலாம், எவ்வாறு பயன்படுத்தக் கூடாது போன்ற தகவல்கள் இருக்கும். அதனை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.


2) பொம்மைகள் வாங்கும் போது எந்த வயது வரை அந்த பொம்மையை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். இதைப் பார்த்து குழந்தைகளின் வயதிற்கு ஏற்றார் போல தகுந்த பொம்மையை வாங்கித் தர வேண்டும்.

3) சிறிய பாகங்கள் கொண்ட பொம்மைகள், எளிதாக குழந்தைகளின் தொண்டையில் மாட்டிக் கொள்ளும் அபாயம் கொண்டவை. அதனால், குழந்தைகளின் வாயை விட, குறைந்தது 3 சென்டிமீட்டர் விட்டம் மற்றும் 6 சென்டிமீட்டர் நீளம் இருப்பது போன்ற பாகங்கள் கொண்ட பொம்மைகளையே வாங்க வேண்டும்.

4) பொம்மைகளின் பாகங்கள் அனைத்தும் உறுதியாக மற்றும் வலுவாக இருக்கிறதா? என்று சோதனை செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த பாகங்கள் எளிதில் உடைந்து குழந்தைகளுக்கு காயம் ஏற்படுத்தலாம்.

5) சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பொம்மைகளை வாங்கித் தர வேண்டும். பிளாஸ்டிக்கைத் தவிர்த்து மறுசுழற்சி செய்யப்பட்ட அல்லது சுற்றுச்சூழலை பாதிக்காதப் பொருளால் செய்யப்பட்ட பொம்மைகளை வாங்கித் தரலாம்.

6) சிறிய வயதில் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகமாக இருக்கும் என்பதால், கற்றல் திறனை வளர்க்கும் விளையாட்டு பொம்மைகளை வாங்கித் தரலாம். அது அவர்களின் கற்பனைத் திறன் மற்றும் படைப்பாற்றலை அதிகரிக்கும்.

7) சிறிய பேட்டரி மற்றும் காந்தம் போன்ற பாகங்கள் கொண்ட பொம்மைகளை வைத்து விளையாடும் போது, அந்த பேட்டரிகள் கையில் கிடைத்தால், குழந்தைகள் வாயில் போட்டுவிடுவார்கள். அதனால் பேட்டரிகள் மற்றும் மேக்னட்கள் உறுதியாக மற்றும் வலுவாக பொருத்தப்பட்டு இருக்கிறதா? என்பதை பரிசோதிக்க வேண்டும்.

பொம்மைகள் வாங்கும் போது தவிர்க்க வேண்டியவை:

1) பொம்மைகளில் தீட்டப்பட்ட வண்ணங்கள், குழந்தைகள் வாயில் எளிதாக கரையக்கூடும். அத்தகைய பொம்மைகளைத் தவிர்க்க வேண்டும்.

2) மெல்லிய பிளாஸ்டிக் பொம்மைகள் வாங்கினால் அது எளிதில் உடைந்து, கூர்மையான பகுதிகளாக மாறி குழந்தைகளுக்கு காயம் ஏற்படுத்தும். பெரும்பாலும் பிளாஸ்டிக் பொம்மைகளைத் தவிர்ப்பது நல்லது.

3) அதீத சத்தம் வெளிப்படுத்தும் பொம்மைகள் குழந்தைகளுக்கு பய உணர்வை தரும். எனவே அவற்றை தவிர்க்க வேண்டும்.

4) மின்சாரத்தால் இயங்கும் பொம்மைகளைத் தவிர்க்கவும்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.