Tuesday, May 7, 2024

Latest Posts

உள்ளூராட்சி தேர்தலில் 80 ஆயிரத்து 672 வேட்பாளர்கள் போட்டி!

2023 மார்ச் 09 ஆம் திகதி இலங்கையில் உள்ள 339 உள்ளாட்சிசபைகளுக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களிலிருந்து 80 ஆயிரத்து 672 பேர் போட்டியிடுகின்றனர்.

இலங்கையில் 24 மாநகரசபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகள் என மொத்தம் 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன.

இவற்றில் 340 சபைகளுக்கான தேர்தல் 2018 ஆம் பெப்ரவரியில் நடைபெற்றது. முதன்முறையாக கலப்பு முறையின்கீழ் இத்தேர்தல் நடத்தப்பட்டது. உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இரட்டிப்பாக்கப்பட்டது. எல்பிட்டிய பிரதேச சபைக்கு 2019 இல் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் இம்முறை 339 சபைகளுக்கு தேர்தலை நடத்துவதற்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. (எல்பிட்டிய பிரதேச சபையின் பதவி காலம் இன்னும் முடியவில்லை. கல்முனை மாநகரசபையின் வேட்பு மனுவை ஏற்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.)

339 சபைகளுக்கு சுமார் 8ஆயிரத்து 300 உறுப்பினர்களை தெரிவுசெய்ய வேண்டி நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களிலிருந்து 80 ஆயிரத்து 672 பேர் போட்டியிட்டனர்.

தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக வருமாறு,

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.