ஆண்ட்ரியா செய்த காரியம், ஆச்சரியத்தில் ரசிகர்கள் !

Date:

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா.
இவர் அதன் பின் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வடசென்னை என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்குறார்.

தமிழ் சினிமாவில் இடம் பெற்று வெற்றியடைந்த பல பாடல்களை இவர் பாடியுள்ளார். சமீபத்தில் இவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

தற்போது இவர் சமூக வலைத்தளம் மூலமாக தனது ரசிகர்களுக்கு உடல்நலன் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

இவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் ரத்த தானம் அளிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்துடன் ரசிகர்களுக்கு சில வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

அதில் “இன்று ஒரு நல்ல செயலைச் செய்ய வேண்டுமா? அப்போ இரத்த தானம் செய்யுங்கள்! இரத்த தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் நீண்ட நாட்களாக இருந்ததால், நேற்று இரத்த வங்கிக்குச் சென்று ரத்த தானம் செய்தேன் என்று நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்து அதனுடன் ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கி வரும் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...

இலங்கை சுங்கத்துறை வசூல் சாதனை

இலங்கை சுங்கத்துறை நேற்று (06) ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு...

குடு விற்பனை செய்யும் NPP அரசாங்க தரப்பு

நாட்டில் போதைப்பொருள் தொற்றுநோயை ஒழிக்க அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படுவதை...