இந்தியா- இலங்கை இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை

0
178

இந்தியா, இலங்கை இடையிலான ஒன்பதாவது வருடாந்த இராணுவப் பணியாளர்களுக்கான பேச்சு வார்த்தை புனேவில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க இலங்கை ஆயுதப்படை அதிகாரிகள் குழு கடந்த 10ம் தேதி இந்தியா வந்ததாக பாதுகாப்பு அமைச்சகத்தின் புனே மக்கள் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இராணுவம்-இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பலதரப்பு பயிற்சிகள், கலை, விளையாட்டு மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் உறவுகளை மேம்படுத்துதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு அதிகரித்து வருவதற்கு இந்த பேச்சுவார்த்தை சாட்சியமாக இருந்தது என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் புனே மக்கள் தொடர்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்… பிரான்ஸ் நாட்டில் இருந்து கடைசி கட்டமாக 3 ரபேல் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here