இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும், பேக்கரி தொழிலுக்கு மாத்திரமே இந்த கையிருப்புக்கள் கிடைக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது முட்டைகளை இறக்குமதி செய்வது மற்றும் கால்நடை மேம்பாட்டிற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் பொது பாவனைக்காக கடைகளில் விற்கப்பட மாட்டாது. பறவைக் காய்ச்சல் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் முயற்சியில் தடுப்பு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
N.S