உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துமாறுகோரி கொழும்பில் பல்வேறு இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.
வரிக் கொள்கை மற்றும் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் இன்று (22) மதியம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டன.
இதேபோன்று தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி சோசலிச இளைஞர் சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இராஜகிரியவில் முன்னெடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கொழும்பில் போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
N.S