Friday, January 3, 2025

Latest Posts

சிங்கப்பூர் சென்று நீதி அமைச்சர் அலி சப்ரி பேசிய விடயங்கள்

சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நீதி அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி வெற்றிகரமாக நிறைவு சிங்கப்பூர் உள்துறை அமைச்சரும் சட்ட அமைச்சருமான மாண்புமிகு கே. சண்முகம் அவர்களின் அழைப்பின் பேரில், இலங்கையின் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌரவ அலி சப்ரி 2022 பிப்ரவரி 13 முதல் 17 வரை சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட உயர்மட்டக் குழுவிற்கு தலைமை தாங்கினார்.

இந்த விஜயத்தின் போது, சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே. சண்முகத்தை சந்தித்த அமைச்சர், சட்டத்துறையில் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இந்த விஜயத்தை மேற்கொள்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்புக்கும், இலங்கைப் பிரதிநிதிகளுக்கு வழங்கிய விருந்தோம்பலுக்கும் அமைச்சர் கே. சண்முகத்திற்கு அமைச்சர் அலி சப்ரி நன்றிகளைத் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டம், மத நல்லிணக்கச் சட்டம், சிங்கப்பூரின் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல முக்கிய சட்டங்களில் சமீபத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் மற்றும் சிங்கப்பூர் அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்ட சமீபத்திய குற்றவியல் சட்டச் சீர்திருத்தங்கள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டன. சட்டம் மற்றும் திருத்தங்களின் செயற்பாட்டு அம்சங்களில் கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து இருதரப்பினரும் கலந்துரையாடினர்.

தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக ஒற்றுமை தொடர்பான சட்டத்தின் பரிணாம வளர்ச்சியின் மூலம் சிங்கப்பூரின் வருமானத்திலிருந்து பயனடையும் நோக்கில், இலங்கையின் சட்டச் சூழலைப் பற்றிய பரந்த புரிதலைப் பெறுவதற்கும், இலங்கை நீதி அமைச்சின் அதிகாரிகளுக்கு வெபினார் தொடரை நடாத்துவதற்கும் சிங்கப்பூரிலிருந்து அதிகாரிகள் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்த விஜயத்தின் போது அமைச்சர் பெப்ரவரி 14ஆம் திகதி மத புனர்வாழ்வு குழு வளங்கள் மற்றும் ஆலோசனை நிலையத்திற்கு விஜயம் செய்தார். உள்துறை அமைச்சின் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் கலாநிதி. முஹம்மது பைசல் இப்ராஹிம் மற்றும் தேசிய அபிவிருத்தி அமைச்சு மற்றும் மத மறுவாழ்வுக் குழுவின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் அமைச்சர் அலி சப்ரியுடன் இணைந்து மதத் தீவிரவாதத்தை எதிர்கொள்வது குறித்த அவர்களது அணுகுமுறையை மறுவாழ்வுக்கு குறிப்பிட்ட முக்கியத்துவத்துடன் விளக்கினர்.

சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தால் நடாத்தப்பட்ட சிங்கப்பூரின் நீதிமன்ற தன்னியக்க செயன்முறை குறித்த மெய்நிகர் விளக்கத்தில் இலங்கைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இலங்கையில் நீதிமன்றங்களை நவீனமயமாக்குதல் மற்றும் தன்னியக்கமாக்குதல் ஆகியவற்றில் இலங்கையின் சொந்த முயற்சிகளை மேற்கோள்காட்டிய அமைச்சர் அலி சப்ரி, சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்ட முறையானது இலங்கைக்கு பெறுமதியான வழக்கு ஆய்வாக அமையும் எனத் தெரிவித்தார். இலங்கை அதிகாரிகளுக்காக சிங்கப்பூரின் நீதிமன்ற தன்னியக்க அமைப்பு தொடர்பிலான வலைப்பக்கத் தொடர்களை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது.

அமைச்சர் பெப்ரவரி 15ஆந் திகதி சிங்கப்பூரின் மெக்ஸ்வெல் சபைக்கும் விஜயம் செய்தார். சிங்கப்பூரின் சட்டத் தொழில்நுட்பத் தளம், சிங்கப்பூரின் பிணக்குத் தீர்வு சுற்றுச்சூழல், சிங்கப்பூர் சர்வதேச மத்தியஸ்த நிலையம், சிங்கப்பூர் சர்வதேச நடுவர் நீதிமன்றம் மற்றும் சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றம் ஆகியவை குறித்த பல விளக்கங்கள் மெக்ஸ்வெல் சபையில் நடத்தப்பட்டன. பெப்ரவரி 16ஆந் திகதி சிங்கப்பூரின் நல்லிணக்க நிலையத்திற்கான விஜயம் ஒன்று இடம்பெற்றதுடன், கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சர் மற்றும் சிங்கப்பூரின் இரண்டாவது சட்ட அமைச்சரான எட்வின் டோங் இலங்கைக் குழுவை அங்கு சந்தித்து வரவேற்றார்.

நல்லிணக்க நிலைய அதிகாரிகள் இஸ்லாம் மற்றும் மதங்களுக்கு இடையேயான உறவுகள் மற்றும் சிங்கப்பூரில் உள்ள இஸ்லாமிய சமூகத்தை தொடர்ச்சியாகப் பாதுகாப்பதில் சிங்கப்பூர் இஸ்லாமிய மத சபை என அழைக்கப்படும் மஜ்லிஸ் உகாமா இஸ்லாம் சிங்கபுரவின் பங்கு குறித்து நிலையத்திற்கு ஒரு விளக்கக்காட்சி மற்றும் சுற்றுப்பயணத்தை நடாத்தினர். சிங்கப்பூர் முஸ்லிம் தலைமைத்துவம், அடையாளத்தை உருவாக்குவதில் சமூகத்துடன் இணைந்து செயற்படுவதே தமது அணுகுமுறையாகும் என மஜ்லிஸ் உகாமா இஸ்லாம் சிங்கபுர விளக்கியது. சிங்கப்பூரின் தேசிய சூழலுக்குள் மத வாழ்க்கையை வடிவமைப்பதில் அவர்கள் முன்னுரிமை அளித்து வருகின்றனர் என்பது சிறப்பிக்கப்பட்டது.

சிங்கப்பூர் பாரம்பரிய நிலையத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் நல்லிணக்க கலரியில் உள்ள பன்முகத்தன்மை மற்றும் மதங்களுக்கு இடையேயான அமைப்பு ஆகியவற்றிற்கும் அமைச்சர் விஜயம் செய்ததுடன், சிங்கப்பூர் சிவில் சமூகத்தின் பல முக்கிய உறுப்பினர்களை சந்தித்தார்.

நீதி அமைச்சர் தலைமையிலான இலங்கைக் குழுவில் இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரொஹான் குணரத்ன, நீதி அமைச்சின் உப குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. நவின் மாரப்பன ஆகியோர் கலந்துகொண்டதுடன், இலங்கையில் உள்ள முழு சட்ட / நீதித்துறை அமைப்புக்களையும் டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நீதிமன்ற தன்னியக்கமாக்கல் மற்றும் சீர்திருத்தத் தலைவர் மற்றும் நீதி அமைச்சின் அமைச்சரின் பணியகத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் திரு. ஷமிர் ஜவாஹிர் இணைந்திருந்தார்.

சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சஷிகலா பிரேமவர்தன, முதன்மைச் செயலாளர் நந்துனி கோவின்னகே மற்றும் முதன்மைச் செயலாளர் மதுசங்க ஜயசிங்க ஆகியோர் நீதி அமைச்சருடன் உயர்மட்டக் கூட்டங்களுக்கும் விஜயங்களுக்கும் உடன் இணைந்திருந்தனர். சிங்கப்பூரின் உள்துறை மற்றும் வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதி அமைச்சு மற்றும் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சு ஆகியவற்றின் ஆதரவுடன் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் இந்த விஜயம் ஒருங்கிணைக்கப்பட்டது.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

சிங்கப்பூர்

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.