இலங்கை தமிழர் சாந்தன் திடீர் மரணம்

Date:

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உள்ளிட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த அனைவரும் இந்திய உச்ச நீதிமன்றத்தால் கடந்த 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார்.

தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என கோரி வந்த நிலையில், சாந்தனுக்கு கடந்த ஜனவரி 24ஆம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கல்லீரல் செயலிழப்புக்கு உள்ளான சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதி கடிதத்தை அண்மையில் அனுப்பியதுடன், விமான டிக்கெட்டுகள் விரைவில் முன்பதிவு செய்யப்படும் என தகவல் வெளியானது.

இலங்கை தூதரக அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின் சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்ற நிலையில் சாந்தன் உடல் நலக்குறைவு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும், சாந்தனின் உடல்நிலை மேலும் மோசமான நிலையில், கோமா நிலைக்குச் சென்றுவிட்ட மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சாந்தன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...