சாந்தனின் மறைவிற்கு யாழ் பல்கலையில் கறுப்புக் கொடி

0
165

மறைந்த சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தாா்.

அவர் இலங்கை திரும்பலாம் என கடந்த 24 ஆம் திகதி இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும் கடந்த 28ம் திகதி மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததையடுத்து அவரின் உடல் இலங்கைக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவரின் இழப்புக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக யாழ் பல்கலைக்கழகங்களில் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here