ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலின் மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீனை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவர் கொழும்பு ஹெவ்லொக் தோட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இன்று அதிகாலை ஜமால்தீன் குறித்த பெண்ணை தாக்கியதாகவும், காயங்களுடன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வெள்ளவத்தை பொலிஸார், கொள்ளுப்பிட்டி மற்றும் கெப்பெட்டிபொல பிரதேசத்தில் உள்ள அவரது வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இலங்கையின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகளான குறித்த பெண் அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றத்திற்கு அறிவித்து ஜமால்தீனுக்கு எதிராக பயணத்தடை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.