உள்ளாட்சி தேர்தல் திகதியை முடிவுசெய்ய அடுத்த வாரம் சிறப்புக் கூட்டத்தை கூட்டுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த விசேட கூட்டமொன்றை மார்ச் 07ஆம் திகதி (செவ்வாய்கிழமை) கூட்டுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நிதியமைச்சின் செயலாளர், அரசாங்க அச்சக அதிகாரி மற்றும் பொலிஸ் மா அதிபர் உட்பட தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளையும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், நேற்று காலை ஆணைக்குழு உறுப்பினர்கள் நடத்திய கூட்டத்தைத் தொடர்ந்து புதிய தேர்தல் திகதியை அறிவிப்பது ஒத்திவைக்கப்பட்டது.

இதனடிப்படையில், எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...