இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உடன் புது டெல்லியில் நடத்திய சந்திப்பில் இலங்கையின் பொருளாதார மீட்சியை எளிதாக்குவதிலும், இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தினார்.
இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிதி உதவியை இலங்கைக்கு வழங்கியிருந்தது, இது உணவு மற்றும் எரிபொருள் வாங்குவதற்கான கடன் வழிகள் உட்பட, கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்த இலங்கைக்கு அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வழிகோலியது.
அலி சப்ரி உடனான சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் ட்விட்டரில் கூறியுள்ளதாவது,
“இலங்கையின் பொருளாதார மீட்சியை எளிதாக்குவதில் கவனம் செலுத்தும் இருதரப்பு ஒத்துழைப்பை எடுத்துக்கொண்டோம். முதலீடு, வர்த்தக மற்றும் மேம்பாட்டு கூட்டாண்மை ஆகிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
“ஹைதராபாத் மாளிகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரை சந்தித்தேன். நாங்கள் ஒரு ஆக்கபூர்வமான இருதரப்பு கூட்டத்தை நடத்தினோம், இந்தோ-லங்கா உறவுகளின் தற்போதைய நிலையை மதிப்பாய்வு செய்தோம்,” என்று அவர் அமைச்சர் அலை சப்ரி கூறியுள்ளார்.
N.S