மொனராகலை மாவட்டத்திலுள்ள புத்தல DP கல்வி IT வளாகக் கிளையில் கல்வி கற்கும் 2900 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (03) புத்தள யுத்கனவ ரஜமஹா விகாரையில் DP கல்வி நிறுவனரும் தலைவருமான தம்மிக்க பெரேரா தலைமையில் நடைபெற்றது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பத்து லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இலக்குடன் தொடங்கப்பட்டுள்ள டிபி கல்வி ஐரி கேம்பஸ் திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் கணினி மொழிப் பாடத்தின் மதிப்பு 25 லட்சம் ரூபாய்.
அதன்படி, புத்தள டிபி கல்வித் தகவல் தொழில்நுட்ப வளாகம் இந்தப் பாடத்தின் பல்வேறு கட்டங்களை முடித்து அன்றைய தினம் சான்றிதழ்களைப் பெற்ற மாணவர்கள் முடித்த கல்வியின் மதிப்பு 200 கோடி ரூபாய்.
இந்த நிகழ்வில் சுமார் 6000 பேர் கொண்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன், மொனராகலை மாவட்டத்தில் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற பாரியதொரு ஒன்றுகூடல் இதுவாகும் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இதனுடன், கிராமத்திற்கு தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளை கொண்டு வரும் நோக்கில், தம்மிக்க பெரேராவால் ஆரம்பிக்கப்பட்டுள்ள DP Silicon Valley IT Office இன் கருத்தின்படி, தகவல் தொழில்நுட்ப தொழில் மையமும் நேற்று புத்தலில் நிறுவப்பட்டது.
தகவல் தொழிநுட்ப துறையில் பணிபுரிபவர்களுக்காக மொனராகலை மாவட்டத்தில் இவ்வாறான தொழில் நிலையம் நிறுவப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 8 DP Silicon Valley IT அலுவலக நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தம்மிக்க பெரேரா தெரிவித்தார். திஸ்ஸமஹாராம – உத்தகந்தர ரஜமஹா விஹாரயமாதர – உருபக்கஹம்பந்தோட்ட – ஹதகலதங்கல்லம்பர – மஹமேவ்னா ஆலயம் ஹகுரன்கெத – ரிகிலகஸ்கட நுவரெலிய புத்தல இந்தப் பிரதேசங்களில் ஏற்கனவே இந்த தொழில் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அப்பிரதேசங்களில் உள்ள DP Education IT வளாகங்களில் கல்வி கற்று முடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த தம்மிக்க பெரேரா எதிர்காலத்தில் நாடு முழுவதும் வேலை மையங்கள் திறக்கப்படும் என்றார்.
கொழும்பில் இருந்து வெகு தொலைவில் உள்ள புத்தல பிரதேசத்தில் தகவல் தொழில்நுட்ப கல்வியில் ஆர்வமுள்ள மாணவர்களும், தேரர்கள் உட்பட சமயத்தலைவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொள்வதை காண முடிவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
இந்த சிறுவர்களுக்கு தகவல் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் தேரர்களுக்கு அவர் மேலும் நன்றி தெரிவித்தார்.