கொழும்பு, மட்டக்குளியில் ‘கதிரானவத்தை குடு ராணி’ என அழைக்கப்படும் 45 வயதுடைய பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யுக்திய நடவடிக்கையின்போது முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 5 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸார் அந்தப் பெண்ணைக் கைது செய்ய முற்பட்டபோது அவர் அருகில் இருந்த கழிவுநீர் கால்வாயில் குதித்துள்ளார்.
பின்னர் மேலதிக பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.