பாராளுமன்றத்தில் ஏற்படும் மாற்றம்

Date:

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் காரணமாக பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி ஆசன வரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் நாளைய அமர்வில் இருந்து அமலுக்கு வரும். இதன்படி, முன்னர் ஆளும் கட்சியில் முன்வரிசையில் அமர்ந்திருந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச நான்காம் அடுக்குக்குப் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள அதேவேளை, பிவிதுரு ஹெல் உருமய தலைவர் உதய கம்மன்பில இரண்டாம் அடுக்கில் இருந்து நான்காம் அடுக்குக்குப் பின்வாங்க நேரிட்டது.

இதேவேளை, கைத்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி.திஸாநாயக்க இதுவரை நான்காம் அடுக்கு ஆசனத்தில் அமர்ந்திருந்ததோடு, தனது அமைச்சுப் பதவியின் காரணமாக அவருக்கு முதலாம் நிலை ஆசனத்தில் அமர வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இதேவேளை, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து போக்குவரத்து அமைச்சரவை அமைச்சராக பதவி உயர்வு பெற்ற திலும் அமுனுகமவும் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் பாராளுமன்றத்தில் இரண்டாவது வரிசை ஆசனத்தில் அமர்வார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...