இன்று (மார்ச் 08) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் தேசிய எரிபொருள் பாஸ் (NFP) நிரப்பப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று காலை அனைத்து கணக்குகளும் டாப்-அப் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, வாரந்தோறும், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தேசிய எரிபொருள் பாஸ் டாப் அப் செய்யப்பட்டது.
வார இறுதி நாட்களில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) ஆகியவற்றின் விநியோக செலவைக் குறைக்கும் முயற்சியில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேசேகர தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தற்போது வழங்கப்படும் வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
N.S