ஐ.எம்.எப் உதவியை தடுத்தால் நாடு எங்கு செல்லுமென கூறமுடியாது!

0
204

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவையும் கடன் மறுசீரமைப்பு வாய்ப்பையும் பெறுவதற்கு மக்கள் பெரும் தியாகங்களைச் செய்ததாகவும், அது எந்த வகையிலும் சீர்குலைந்தால்,நாட்டுக்கு என்ன நடக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாடு கடுமையான பாதாளத்தில் விழுவதைத் தடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைத் தவிர வேறு வழிகள் இல்லை.

எனவே நாட்டை இருந்த இடத்தில் இருந்து மீட்டு சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய இடத்திற்கு கொண்டு வருவதற்கு அனைவரும் பொறுமையுடனும் பொறுப்புடனும் சிறிது காலம் செயற்பட வேண்டும்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (8) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவையும் மீறி நடத்தப்படும் போராட்டங்களால் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வர அச்சமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியின் காலத்திலிருந்து சீனாவும் கடனை மறுசீரமைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வரிக் கொள்கை மற்றும் விலைச் சீர்திருத்தங்களால் மக்கள் அவதியுற்றால், தியாகம் செய்யாவிட்டால், நீட்டிக்கப்பட்ட கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தேவையான அடிப்படை நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here