கனடாவில் பயங்கரம், 6 இலங்கையர்கள் வெட்டிக் கொலை

Date:

கனடாவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த 06 பேரும் இலங்கையர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவின் தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் 4 குழந்தைகள் உட்பட 6 ஆறு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் படுகாயமடைந்த ஒருவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒட்டோவா பிராந்தியத்தில் படுகொலைசெய்யப்பட்ட குடும்பத்தினர் தொடர்பில் அடையாளம் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பொலிஸாரின் சந்தேகத்தின்பேரில் அவர்களுடன் ஒரே வீட்டில் இருந்த இலங்கையைச் சேர்ந்த பெப்ரியோ டீ சொய்சா என்ற 19 வயதான சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கனடாவிற்கு அண்மையில் குடிபெயர்ந்த அக்குடும்பத்தினரின் பெயர் விபரம் வருமாறு,

ஜீ காமினி அமரகோன் (40), தர்ஷனி பண்பரநாயக்க ஹமா வல்வே தர்ஷனி டிலந்திகா ஏகனாயக (35) – தாய், இனுக விக்ரமசிங்க (7) – மகன், அஷ்வினி விக்கிரமசிங்க (4)- மகள் ரினியானா விக்ரமசிங்க (2) -மகள், கெல்லி விக்கிரமசிங்க (2 மாதம்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த குழந்தைகளின் தந்தை பலத்த காயங்களோடு உயிர் தப்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பலியானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என ஒட்டாவாவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதி செய்ததோடு, கொலைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...

NDB விவகாரம்: இலங்கை வங்கி சூழலுக்கு கவன எச்சரிக்கை

இலங்கையின் நிதியியல் அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நேஷனல் டெவலப்ப்மென்ட் வங்கி...