முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

0
259

சொக்கா மல்லி என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் போது, பிரேமலால் ஜயசேகர தனது துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து மற்றும் அச்சுறுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இதன்போது, குறித்த துப்பாக்கியின் உரிமம் காலாவதியாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here