குண்டுத் தாக்குதல்கள் கதை பொய்

0
237

கொழும்பு உள்ளிட்ட நெரிசலான பகுதிகளில் குண்டுத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தத் தயாராக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களிலும் சில இணையதளங்களிலும் வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என பொலீஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலீஸ் மா அதிபர் எப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

அத்தகைய சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.

எனினும், கஞ்சிபானி இம்ரானுடன் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்த ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அந்த சந்தேக நபர் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும் பொலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here