இரு பிள்ளைகளையும் கொடூரமாக கொலை செய்த தந்தை – அம்பாறையில் சம்பவம்

Date:

தந்தை ஒருவர் தனது இரு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொலைசெய்துவிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தனது 29 வயதான மகன் மற்றும் 15 வயதான மகள் ஆகியோரையே தந்தை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது பிள்ளைகளின் கழுத்தை வெட்டி இருவரையும் தந்தை கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதையடுத்து, 60 வயதான தந்தை, தனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்த நிலையில், கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வெட்டி கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளும் மன வளர்ச்சி குன்றியவர்கள் என தெரிய வருகின்றது. பிள்ளைகளின் தாய் அண்மையில் உயிரிழந்த நிலையிலேயே, இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. டீசல்: ரூ.15 அதிகரித்து ரூ.407 சூப்பர்...

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...