பல்வேறு தொழிற்சங்கங்கள் நேற்று முன்னெடுத்த போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஒரு சில தொழிற்சங்கங்கள் மாத்திரமே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஏனைய தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஒருசில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், பணிப்பகிஷ்கரிப்பு முழுமையாக செயற்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இன்று பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய சேவைகள் உரியவாறு இடம்பெறுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், நாடளாவிய ரீதியில் அன்றாட செயல்பாடுகள் வளமைபோட்ன்று இடம்பெற்றதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
N.S