மேல்மாகாண பிரதம சங்கநாயக்கரும் அபயராம பீடாதிபதியுமான கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர், அண்மையில் பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேரடியாகவே கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெரும்பான்மை வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மக்களுக்கு துரோகம் இழைத்து வீழ்ச்சியை எதிர்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் தேரர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு நிருவாகத் திறமையோ, ஆளுமைத் திறமையோ இல்லையென்றும், தமக்கு நன்மை பயக்கும் ஆட்களையே அவர் சூழ்ந்து கொண்டார் என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மேலும் தெரிவித்தார்.
“அவர் தவறான பாதையில் பயணிப்பதாக நாங்கள் பலமுறை அவருக்குத் தெரிவித்தோம். இதனால் அவர் வீழ்ச்சியை சந்தித்தார். அவருக்கு ஆட்சி செய்யும் திறமை இல்லாததே இன்று நாம் இந்த நிலைக்கு முகம் கொடுக்கக் காரணம்” என தேரர் மேலும் தெரிவித்தார்.