மக்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் பிரமாண்ட மே தின நிகழ்வுக்குத் தயாராகும் ஐதேக

0
222

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கொண்டாட்டத்தை கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்திற்கு அருகாமையில் நடாத்தி அதிகளவான மக்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முன்னாள் நிதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின பேரணியை மாபெரும் வெற்றியடைய செய்ய கட்சியின் அமைப்பாளர்கள் அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்த நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்வதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றுள்ளதாகவும், வெளிநாட்டு கையிருப்பு 5 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும், அதன் மூலம் மக்கள் பயனடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெற்றியை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர், எனவே சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணை நிச்சயம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here