கோட்டாவின் உடற்பயிற்சி ஆலோசகர் ஹெரோயினுடன் கைது

0
221

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய முன்னாள் இராணுவ லான்ஸ் கோப்ரல் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் போதைப்பொருள் வியாபாரம் செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த போது அவருக்கு உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய இந்த சந்தேகநபர் தற்போது இராணுவத்தில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here