கிழக்கு ஆளுநர் ஏற்பாட்டில் இலங்கை பிரதமரை சந்தித்த மலேசிய நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன்!

Date:

இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மலேசிய நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணனுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் இலங்கை – மலேசிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று டட்டுக் சரவணன் மலேசிய மனிதவள அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இலங்கையர்கள் மலேசியாவில் பணிபுரிவதற்கான பத்தாயிரம் வேலைவாய்ப்பு விசாவிற்கான ஒதுக்கீட்டுக்கு அனுமதியை வழங்கியுள்ளார்.

அதற்காக பிரதமர் நன்றிகளை தெரிவித்துள்ளதுடன், இந்த நடவடிக்கைக்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தன பாராட்டுக்களை தெரிவித்தார்.

தற்போது இவ் ஒதுகீட்டினை இலங்கையை சேர்ந்த 1853 இளைஞர், யுவதிகள் பயன்படுத்தியுள்ளனர். மேலும் மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் சிறந்த நிர்வாகத்திரன் ஊடாக மிக விரைவாக இலங்கையை பொருளாதார விழ்ச்சியில் இருந்து மீட்டெடுத்தனர். ஏனைய நாடுகள் இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் மீண்டெழ கையாண்ட அணுகுமுறைக்கு பாராட்டுக்களை தெரிவித்தது. அத்துடன் இலங்கைக்கு எந்த நேரத்திலும் மலேசிய அரசாங்கம் உதவுவதற்கு காத்திருப்பதாகவும் டட்டுக் சரவணன் தெரிவித்ததாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  சட்டவிரோதச்...

ஸ்டாலின் தோல்வி!

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்...

அதிரடி முன்னிலையில் தமிழக விஜய் வெற்றிக் கழகம்!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4,...

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...