இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனவேட்பாளராக களமிறங்கி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மையுடன் வெற்றியீட்டுவார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்
அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளராக தேர்தலில் களமறிங்கவில்லை. அவர் எந்தவொரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தாமலேயே இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார்.
அனைத்து கட்சிகள் இனங்கள் மதங்களை சேர்ந்தவர்களை ஒன்றிணைத்து செயற்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி சுயாதீனவேட்பாளராகவே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி வெற்றிபெறுவார். அது மாத்திரமல்ல ஜனாதிபதி தேர்தலில் அதிகூடியவாக்குகளுடனேயே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று தேசியத்லைவராக மீண்டும் ஆட்சியமைப்பார்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.