துமிந்த, லசந்த, அமரவீர நீக்கம் – மைத்திரி அதிரடி

Date:

பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, லசந்த அலகியவண்ண மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30) கட்சித் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் செயற்குழுவில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு மகியங்கனை தொகுதி அமைப்பாளர் கே.பி. குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவண்ண பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு ஹெக்டர் பெத்மகே நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...